செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் இந்திர பிரியதர்ஷினி நகர் பகுதியில் உள்ள சாலையில் மின்சார வாரியத்தின் கேபிள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் பணி தொடர்ச்சியாக நடைபெறாமல், 2 மாதத்திற்கு ஒருமுறை நடக்கிறது. அவ்வபோது வந்து சாலையில் பள்ளம் தோண்டிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் பணி நடந்தபாடில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பரபரப்பான சாலை என்பதால் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.