மாணவிகள் அவதி

Update: 2025-02-09 14:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். மழை பெய்யும் போது, பள்ளிக்கு முன்னால் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரிதும் உடல்நல குறைவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்