நோய் தொற்று அபாயம்

Update: 2025-02-09 14:10 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, பெரியகளக்காட்டூர் மற்றும் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் சுமார் 37 மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்கள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள், மண் சேர்ந்து கால்வாய் மூடு நிலையில் உள்ளது. மேலும், மழை தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் மழைநீர் ஓடும் நிலை உருவாகியுள்ளது. கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்