சென்னை எம்.எம்.டி.ஏ.காலனி உள்ள டாக்டர் அம்பேத்கார் தெருவில் மாடுகள் அதிகளவில் சாலையில் நடமாடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலமுறை விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலையை கடந்து செல்லும் பொதுமக்களையும் முட்டுவதற்கு துரத்துவதால் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் செல்லும் மாடுகளை பிடித்து சென்று உரிமையாளர்களிக்கு அபராதம் வசூலிக்க வேண்டும்.