திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமத்தில் உள்ள ரேசன் கடை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சகூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேரில் வந்து புதிய ரேசன்கடையை கட்டி கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.