அரியலூர் பேருந்து நிலையம் அருகே செட்டி ஏரி ள்ளது. இந்த ஏரியின் கரையில் தினமும் பொதுமக்கள் பகல் மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்கின்றனர். இந்தநிலையில் நடைபாதை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.