சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-02-09 12:08 GMT

கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் இருந்து ஆனைசெத்தகொல்லி பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையானது கடந்த சில மாதங்களாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதுவும், மழை நேரங்களில் அதில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை அறியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட் துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்