கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பிகள் வைக்கப்படுகின்றன. அந்த கம்பிகளில் சில நேரங்களில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் சிக்கி கொள்கின்றன. இதனால் அவை காயம்பட்டு சுற்றித்திரியும் நிலை உள்ளது. எனவே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பிகளை வைக்கும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.