நடவடிக்கை தேவை

Update: 2025-02-09 08:49 GMT

கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆடுகள் மந்தையாக சுற்றித்திரிகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்துடன் காணப்படும் இந்த சாலைகளில் ஆடுகள் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் ஆடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்