தெருநாய் தொல்லை

Update: 2025-02-02 17:55 GMT

பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.எல்.ஆர். லே-அவுட் மற்றும் அய்யப்பா நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. கூட்டம் கூட்டமாக திரியும தெருநாய்கள் சாலைகளில் வலம் வருவதால் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்பட பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. சில நேரங்களில் திடீரென பாய்ந்து பொதுமக்களை கடிப்பதால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். கோழிக்கழிவுகளை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கொண்டுவந்து போட்டு விட்டு செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்