அரசூர்- திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இதில் தண்ணீர் ஊற்றெடுத்து தேங்கி நிற்கிறது. மின்மோட்டார் பழுதால் அந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.