விழுப்புரம் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அருகே வீரமூர் ஊராட்சி வி.புதுப்பாளையம் கிராமத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.