காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பெரியபனிச்சேரி, ஆகாஷ் நகர் பகுதி சாலையில் அதிக அளவு மாடுகள் சுற்றித்திரிகிறது. பரபரப்பான சாலை என்பதால் அதிக அளவு வாகனங்கள் அந்த சாலையில் செல்கிறது. அப்போது சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளை முட்டுவதற்கு துரத்துகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.