செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் கண்ணதன் நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வரும் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. மேலும், பள்ளி வரும் மாணவ- மாணவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.