முறையாக இயங்காத ரேஷன் கடை

Update: 2025-02-02 14:15 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, வரதராஜபுரம் ஊராட்சி 3-வது வார்டில் பாடசாலை தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அந்த பகுதியில் உள்ள 750 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் இங்கு செயல்படும் ரேஷன் கடை சரியான நேரத்தில் திறப்பதில்லை. இதனால் ரேசன் கடைக்கு வரும் பயணிகள் பொருட்கள் வாங்க முடியாமல் வீடு திரும்பும் நிலை உள்ளது. எனவே, ரேஷன் கடை கால அட்டவணையில் திறக்கும் நேரம், ஓய்வு நேரம், திறக்கும் நாட்கள், மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்பதை கடையின் முன்பு எழுத வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்