சென்னை பெரியமேடு, வார்டு 58-ல் சென்னை மாநகராட்சி உடற்பயிற்சி கூடம் மற்றும் குத்துச்சண்டை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள ஏராளமான பள்ளி மாணவர்கள் இங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கூடம் சரியாக பராமாிக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து பழங்கால கட்டிடம்போல உள்ளது. இந்த கட்டிடம் கட்டிய பின்பு இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதேபோல, உடற்பயிற்சி கூடம் உள்ள பகுதியை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.