ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்கின்றன. மேலும் இந்த நாய்கள் சாலைகளில் ஆங்காங்கே படுத்துக்கொள்வதால் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.