திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னகர், காமராஜபுரம், செல்வ நகர், பெரிய மிளகு பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை சில நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்வதினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் இப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பொதுமக்களை முட்ட துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.