திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் புது கட்டிடத்தின் தரை தளத்தில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்கள் உடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இதில் நோயாளிகள் நடந்து செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த பகுதியை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.