தர்மபுரி நகரில் சேலம் சாலையில் மைய தடுப்பு பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கணிசமான விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த சாலையில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் இரவு நேரத்தில் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், தர்மபுரி.