அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே பள்ளி மைதானம் உள்ளது. கிராம பொதுமக்களால் சீர் செய்யப்பட்ட இந்த மைதானத்தை அருகே வசிக்கும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் சுதந்திரமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.