திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து செல்லும் வழியிலும், பழைய கரூர் ரோடு செல்லும் வழியிலும், மேல சிந்தாமணி கொசமேட்டு தெரு, கீழ சிந்தாமணி கோரிமேடு தெரு பகுதியிலும் ஏராளமான தெருநாய்கள் உள்ளது. இந்த நாய்கள் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.