திருச்சி மாநகராட்சி கருமண்டபம் 56-வது வார்டு எஸ்.எஸ்.நகர், நியூ ஆல்பா நகர், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பிரதான சாலையானது பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு சீரமைக்காமல் கிடப்பிலேயே உள்ளது. இந்த சாலையானது குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிடைந்து வருகின்றனர். மேலும் அண்மையில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள், பெரிதும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.