திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மாநகரின் முக்கிய பகுதியாகும். சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.கார்னரில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட் பகுதி வழியாக திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வருகிறது. இந்த நிலையில் ஜி.கார்னர்- டி.வி.எஸ். டோல்கேட் இடையே பல்வேறு வணிக வளாகங்கள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள சாலை குறுகலாக உள்ளது. இந்தநிலையில் சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதால் எப்போதுமே போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. எனவே சாலையோரம் நிறுத்தும் வாகனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.