கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூலக்காட்டானூர் செல்லும் சாலை அருகே பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது சேதம் அடைந்துள்ளது. அதில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த நீர்தேக்க தொட்டியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.