கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அவற்றை அடிக்கடி தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் அமராவதி ஆற்றுப்பாலம் பகுதியில் அதிகளவில் புகை வெளிவருகிறது. மேலும் இந்த புகை வெளிவருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் குப்பைகள் தீயிட்டு கொளுத்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.