கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், கரூர் சாலையில் கடைகள், ஓட்டல்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும். ஓட்டலில் இருந்து வெளிவரும் கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால் வசதி இல்லாததால் சாலையில் செல்கிறது. மேலும் ஓட்டல்களில் இருந்து வெளிவரும் கழிவு நீரும் சாலையில் குட்டை போல தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது படுவதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் அமைக்க வேண்டும்.