தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-26 18:25 GMT

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள தெற்கு மடவிளாகம் பகுதியில் இரவு நேரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.


மேலும் செய்திகள்