கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், ஓ.கே.ஆர். சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என பலர் கீழே விழுந்து படுகாயமடையும் சம்பவமும் நடந்து வந்தது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து செய்தி `தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து குண்டும், குழியுமாக காணப்பட்ட தார்சாலை சீரமைக்கப்பட்டது. எனவே சாலையை சீரமைத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' புகார் பெட்டிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.