விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை அருகில் அரண்ட ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீர் சீராக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரி நிரம்பாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?