தியாகதுருகம் மாரியம்மன் கோவில் எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடமானது தற்போது பலத்த சேதமடைந்து எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து குழந்தைகள் நலன் கருதி தற்போது அங்கன்வாடி நிலையமானது தனியார் கட்டிடத்தில் இ்யங்கிவருகிறது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.