தியாகதுருகம் அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி அவற்றை துரத்தும் பொதுமக்களை கடிக்கப்பாய்கின்றன. எனவே கிராமத்தில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.