பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் ஊராட்சியில் கோட்டலாம்பாக்கம் -அங்குசெட்டிபாளையம் சாலையில் வாய்க்கால் தண்ணீர் செல்ல தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் அப்பகுதியில் வாய்க்கால் தூர்ந்துபோய் கிடப்பதால் மழைக்காலங்களில் அந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.