சாலையில் உடைக்கும் மதுபாட்டில்கள்

Update: 2025-01-26 17:57 GMT

அரியலூர் பழைய பஸ் நிலையம் அருகே வண்ணான்குட்டை உள்ளது. இதன் அருகில் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கும் பலரும் இந்த குட்டை அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை குட்டையின் உள்ளேயும், சாலையோரத்திலும் போட்டுவிட்டு செல்கின்றனர். ஒரு சிலர் பாட்டில்களை சாலையில் உடைத்து போட்டும் செல்கின்றனர். நீர்வளத்தை பெருக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான நீர்நிலைகளை மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வண்ணான்குட்டை அருகே யாரும் மது அருந்தாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்