ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயருமா?அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைகளுக்கு அரியலூர் செல்ல வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. எனவே விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவருடன் இயங்கும் வகையில் தரம் உயர்த்த வேண்டும்.