மதுரை பி.பி.சாவடி அருணாச்சலம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.