தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-26 17:27 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு செல்லும் வழியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதனால் அப்பகுதி வழியே செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். தெருநாய்கள் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களின் குறுக்கே புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனா். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-மகேஷ், சேலம்.

மேலும் செய்திகள்