இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் அருவிகளில் குளித்துவிட்டு பொது இடங்களில் மது அருந்துகின்றனர். குறிப்பாக கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெண்கள், குழந்தைகள் இருப்பதை பொருட்படுத்தாமல் அரை நிர்வாண கோலத்தில் குளித்துவிட்டு அங்கேயே மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். இவ்வாறு பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, ஏற்காடு.