செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பாரேரியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். புத்தாண்டு, பொங்கல் என ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட தொகை கொடுக்கவில்லையென்றால் அந்த வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்றாமல் விட்டு செல்கின்றனர். இதனால் துலுக்காணத்தம்மன் தெரு, ரேஷன் கடை இயங்கி வரும் தெரு, பல்லவ வர்மன் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.