செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட, நெல்லிக்குப்பம் பகுதிக்கு செல்லும் சாலையில் செயின்ட் மேரிஸ் பள்ளி உள்ளது. இந்த பகுதி உள்ள சாலை மிகவும் பரபரப்பான காணப்படும். ஆனால் இந்த சாலையில் உள்ள மின்விளக்கு பலநாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் சாலையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.