மாணவர்கள் அச்சம்

Update: 2025-01-26 13:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு, சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியின் கட்டிடம் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கதவு இல்லாததால் அந்த பகுதியில் உள்ள மாடுகள், நாய்கள் பள்ளி வளாகத்திலேயே கிடக்கிறது. இதனால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், மது பிரியர்கள் அதிக அளவில் இருப்பதால் அங்கேயே மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் பாட்டில் , மதுபாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டு செல்கிறார். எனவே இந்த பள்ளியின் சுற்றுசுவருக்கு கதவு அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்