பந்தலூர் அருகே தேவகிரி பகுதியில் சாலையோரத்தில் ராட்சத மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது விழுந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை சமயத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஆபத்தான அந்த மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.