அம்பத்தூர் ரெயில் நிலையம் வழியாக சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் விரைவு மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 4-வது தண்டவாளம் வழியாக செல்கிறது. ஆனால் 4-வது தண்டவாளம் இருக்கும் பகுதியில் நடைமேடை இல்லாமல் உள்ளது. எனவே, அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் விரைவு மின்சார ரெயில்கள் நிற்பதில்லை. இதனால் ஆவடி உள்பட தொலைவில் இருந்து வரும் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் தொழிற்பேட்டை ஊழியர்கள் அம்பத்தூரில் இறங்குவதற்கு பதிலாக வில்லிவாக்கம் வரை சென்று திரும்ப வேண்டியுள்ளது. எனவே, பயணிகளின் சிரமம் தீர, அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் 4-வது நடைமேடை அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.