சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்வதோடு சிலரை கடித்து குதறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?