உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திராசாலை, கபூர் கான் வீதி, ராமசாமி நகர் வழியாக எலைய முத்தூர் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகே அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசாசதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.