கப்பியறை பேரூராட்சியில் பூக்கடையில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் புலிமுறிதான் குறிச்சிகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் விவசாயத்துக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். முறையாக பராமரிக்காததால் தற்போது குளம் முழுவதும் ஆகாயதாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரைகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ரெனிஷ், திருவிதாங்கோடு.