நடவடிக்கை தேவை

Update: 2025-01-26 09:04 GMT

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்காவிளை சந்திப்பில் சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அந்த பகுதியில் உள்ள ஒரு வளைவில் ஜல்லிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிகள் போக்குவரத்துக்கு இடையூறுகாக கொட்டப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சூர்யா, புதூர்.

மேலும் செய்திகள்