ஈரோடு திரு.வி.க. ரோட்டில் கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்படுகின்றனர். தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.