‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2025-01-19 14:52 GMT

ஈரோடு கொங்கு நகர் எம்.ஜி.ஆர். வீதியில் ரேஷன் கடை அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. எனவே இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது மின்கம்பத்தின் அடிப்பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்