விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அதனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தின் சாலையோரத்தில் பெரிய பள்ளம் இருந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி புகார்பெட்டியில் கடந்த வாரம் வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்தபள்ளத்தை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.